கட்டுரைகள், ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள், பாடநூல்கள், துணைப்பாட நூல்கள் போன்றவை தவிரக் குறிப்பிட்டுக் கூறத்தக்க எழுத்துப் பணி எதுவும் 1989 வரை நடைபெற வில்லை. எழுத்துப் பணி தமக்கு இயலாத பணி என்ற முடிவுடன் இருந்த இவருக்கு ஒரு வாய்ப்பின் உந்துதலால் ஏற்பட்ட எழுச்சியால் 1990 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை சிறியவும் பெரியவும் ஆகிய எழுபதுக்கு (70) மேற்பட்ட நூல்களை இன்றுவரை எழுதி வெளியிட்டுள்ளார்.
இவர் குடும்பத்தில் இப்போது பன்னிரு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை உறுப்பினராகக் கொண்டு நன்னன் குடி எனும் பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. அதுஆண்டுதோறும் பின்வரும்அறச்செயல்களைச் செய்கிறது.
பெரியாரின் பெரு நெறி பிடித் தொழுகுவதால் அகம், புறம் ஆகிய இரு நெறிகளிலும்,
பொருள் நிலை, உணர்வு நிலை ஆகியவற்றிலும் நல்வாழ்வு வாழும் மா.நன்னன்
வாழ்க்கைக் குறிப்புகள்